தடையை உடைத்த மாணவர்களுக்கு ‘தனி’ இடம்

|Sun Feb 11 13:00:03 IST 2018

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் இருக்கும் அய்யம்பட்டி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக துவங்கி நடந்துவருகிறது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து போட்டியை துவக்கிவைத்தார். கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் உடன் இருந்தனர்.
அய்யம்பட்டி கிராம கமிட்டி சார்பாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. பதிவு செய்யப்பட்ட 650 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் முறையான மருத்துவபரிசோதனைக் பின்னரே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். வரிசையாக அவிழ்த்துவிடப்படும் காளைகள், வாடி வாசல் வழியாக வரும் போது மாடுபிடி வீரர்கள் அதன் மீது பாய்ந்து காளையின் திமிலை பிடிக்கும் காட்சியைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் அய்யம்பட்டியில் குழுமியிருக்கிறார்கள். பார்வையாளர்கள் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு தடையை உடைத்த மாணவர்களுக்காக தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். பைக், கட்டில், பீரோ, தங்க காசு என மாடு பிடி வீரர்களை உற்சாகப்படுத்தும் பல பரிசுகள் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

|Sun Feb 11 13:00:03 IST 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *