விஷாலை சங்கத்தை விட்டு விரட்டுவேன்

 

விஷாலை சங்கத்தை விட்டு விரட்டுவேன்: ஜே.கே.ரித்தீஷ் சபதம்!

|Sat Feb 10 16:11:00 IST 2018

நடிகர் விஷாலை நடிகர் சங்கத்தை விட்டு விரட்டுவேன் என்று நடிகர் ஜே.கே. ரித்தீஷ் சபதம் செய்துள்ளார்.

தமிழில் ‘நாயகன்’ படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஜே.கே.ரித்தீஷ். இவர் கடந்த ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவாக செயல்பட்டார். பின்பு விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை கடுமையாக எதிர்க்கும் எதிராளியாகிவிட்டார்.

இந்நிலையில் இந்த ஆண்டு மே மாதம் நடக்கவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு எதிராக போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த ‘சிவா மனசுல புஷ்பா’ டீஸர் வெளியிட்டு விழாவில் ஜேகே ரித்தீஷ் பேசியதாவது, நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு, விஷாலை நடிகர் சங்கத்தை விட்டு விரட்டுவேன் என கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *