தமிழ் ராக்கர்ஸ் சிறந்த வேலைக்காரன், பெரிய மூளைக்காரன்- வீடியோ

தமிழ் ராக்கர்ஸ் வேலைக்காரன், பெரிய மூளைக்காரன் என்று இயக்குனர் மோகன்ராஜா தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், நயன்தாராவை வைத்து மோகன் ராஜா இயக்கியுள்ள வேலைக்காரன் படம் நாளை ரிலீஸாகிறது. இந்நிலையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மோகன் ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

அடுத்த வாரம் படம் தியேட்டரில் இருக்காது, சீக்கிரம் பார்த்துவிடுங்கள் என்று ட்வீட் போடுகிறார்கள். அருவி ஒரு வாரம் தாங்கும். வேலைக்காரன் 2 அல்லது 3 வாரம் தாங்கும். இன்று சினிமாவின் வேகம் அப்படி உள்ளது.

பொங்கலுக்கு புதுப்படங்கள் வரப்போகிறது. இதில் தமிழ் ராக்கர்ஸ், பல பிரச்சனைகளை தாண்டி வர வேண்டும். தமிழ் ராக்கர்ஸும் ஒரு நல்ல வேலைக்காரனாக இருந்தால் இந்த வேலைக்காரனை கொஞ்சம் தாமதாக ரிலீஸ் பண்ணச் சொல்லி கேட்டுக் கொள்கிறேன்.

அவன் நல்ல வேலைக்காரன் தான். எனக்கு தெரிந்து அவனை விட சிறந்த வேலைக்காரன் வேறு யாரும் இல்லை. அவ்வளவு மூளைக்காரன். தமிழ் ராக்கர்ஸ் எத்தனை ராத்திரி, பகல் விழித்திருப்பான். எவ்வளவு வியர்வை சிந்தியிருப்பான் அவன். அந்த வியர்வைக்கு மரியாதை செய்து தான் நான் படம் பண்ணியிருக்கிறேன்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial